உறுவது சீர்தூக்கும் நட்பும் – குறள்: 813

Thiruvalluvar

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
– குறள்: 813

– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும்,
விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஓரே மாதிரியானவர்களே
ஆவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் நோக்காது அவரால் தமக்கு வரும் பயனை மட்டும் அளந்து பார்க்கும் தந்நல நண்பரும்; கொடுப்பவரை உள்ளத்திற் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் விலைமகரிரும்; பிறர்கேட்டையும் அவர் படுந்துன்பத்தையும் நோக்காது தமக்குக் கிடைக்கும் பொருளை மட்டும் நோக்கிக் களவு செய்வாரும்; தம்முள் ஒத்தவராவர்.



மு. வரதராசனார் உரை

கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.



G.U. Pope’s Translation

These are alike: the friends who ponder friendship’s gain,
Those who accept what’er you give, and all the plundering train.

Thirukkural: 813, Evil Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.