உட்கப்படாஅர் ஒளிஇழப்பர் – குறள்: 921

Thiruvalluvar

உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.
குறள்: 921

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.



கலைஞர் உரை

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது
மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு நடப்பவர்; ஒருபோதும் பகைவரால் அஞ்சப்படார்; அதுவேயுமன்றித் தாம் பெற்றிருந்த நற்பெயரையும் இழப்பர்.



மு. வரதராசனார் உரை

கள்ளின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவார்.



G.U. Pope’s Translation

Who love the palm’s intoxicating juice, each day, No rev’rence they command, their glory fades away.

Thirukkural: 921, Not Drinking Palm – Wine, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.