உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். – குறள்: 442
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
கலைஞர் உரை
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தெய்வத்தால் அல்லது மக்களால் நேர்ந்த துன்பங்களை முறைப்படி நீக்கி; அத்தகையன பின்பு நேராவண்ணம் முன்னறிந்து காக்க வல்ல தன்மையுடையாரை; அவர் மகிழ்வன செய்து அவர் துணையைப் போற்றிக் கொள்க.
மு. வரதராசனார் உரை
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
G.U. Pope’s Translation
Cherish the all- accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defends.
– Thirukkural: 442, Seeking the Aid of Great Men, Wealth