குருவிரொட்டி இணைய இதழ்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் – குறள்: 261


உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. – குறள்: 261

– அதிகாரம்: தவம், பால்: அறம்



கலைஞர் உரை

எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும்
தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் “தவம்” என்று கூறப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும் , பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையுமாகிய அவ்வளவே; தவத்தின் வடிவாம்.



மு. வரதராசனார் உரை

தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.



G.U. Pope’s Translation

To bear due penitential pains, while no offence,
He causes others, is the type of ‘penitence’.

 – Thirukkural: 261, Penance, Virtues