குருவிரொட்டி இணைய இதழ்

உற்றவன் தீர்ப்பான் மருந்து – குறள்: 950

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
உற்றவன் தீர்ப்பான் மருந்து

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
– குறள்: 950

– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்



கலைஞர் உரை

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நோயாளி, மருத்துவன், அவனுக்குக் கருவியாகிய மருந்து அல்லது மருத்துவமுறை, அவனுக்குத் துணைவனாயிருந்து நோயாளியிடம் சென்று மருந்து கொடுப்பவன், நோய்க்குச் செய்யும் மருத்துவம்.



மு. வரதராசனார் உரை

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link