உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை – குறள்: 530

Thiruvalluvar

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்.
– குறள்: 530

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்



கலைஞர் உரை

ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கரணிய மின்றித் தன்னிடத்தினின்று பிரிந்துபோய்ப் பின்பு ஒரு பயன் நோக்கித் திரும்பிவந்த உறவினனை ; அரசன் அப்பயனைச் செய்து வைத்து ஆராய்ந்து தழுவிக்கொள்க.



மு. வரதராசனார் உரை

தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்.



G.U. Pope’s Translation

Who causeless went away , then to return, for any cause, ask, leave; The king should sift their motives well, consider and receive!

 – Thirukkural: 530, Cherishing one’s kindred, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.