உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் – குறள்: 1033

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுஉண்டு பின்செல் பவர். – குறள்: 1033

– அதிகாரம்: உழவு, பால்: பொருள்



கலைஞர் உரை

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.



ஞா. தேவநேயப் பாவாணர்

எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே, உரிமையுடன் வாழ்பவராவர்; மற்றோரெல்லாம் பிறரை வணங்கி அதனால் உண்டு அவர்பின் செல்லும் அடிமையரே.



மு.வரதராசனார் உரை

உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.