குருவிரொட்டி இணைய இதழ்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – குறள்: 50


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்.
– குறள்: 50

– அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம்



கலைஞர் உரை

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன், இவ்வுலகத்தானேயாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.



மு.வரதராசனார் உரை

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.



G.U. Pope’s Translation

Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed.

Thirukkural: 50, Domestic Life, Virtues