
வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. – குறள்: 861
– அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள்
கலைஞர் உரை
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே
பகைமாட்சி எனப் போற்றப்படும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் தவிராது விரும்புக.
மு. வரதராசனார் உரை
தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
G.U. Pope’s Translation
With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray.
– Thirukkural: 861, The might of Hatred, Wealth.
I agree with kalaignar train not others interpretation.