வாளொடு என்வன்கண்ணர் அல்லார்க்கு – குறள்: 726

Thiruvalluvar

வாளொடு என்வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்அவை அஞ்சு பவர்க்கு.
– குறள்: 726

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில்
பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன தொடர்புண்டு?; அதுபோல, நுண்ணறிஞரவைக்கு அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்புண்டு?



மு. வரதராசனார் உரை

அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?



G.U. Pope’s Translation

To those who lack the hero’s eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?

 – Thirukkural: 726, Not to dread the Council, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.