குருவிரொட்டி இணைய இதழ்

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் – குறள்: 271


வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். – குறள்: 271

– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்



கலைஞர் உரை

ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து
அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும்
பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறரை வஞ்சிக்கும் மனத்தை யுடையவனின் பொய் யொழுக்கத்தை; அவனுடம்பாய்க் கலந்துள்ள ஐம்பூதங்களும் கண்டு தம்முள்ளே எள்ளிச் சிரிக்கும்.



மு. வரதராசனார் உரை

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.



G.U. Pope’s Translation

Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, deride within.

 – Thirukkural: 271, Inconsistent Conduct, Virtues