வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் – குறள்: 632

Thiruvalluvar

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
– குறள்: 632

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப்
பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மனவுறுதியும்; நற்குடிப் பிறப்பும்; குடிகளைக் காத்தலும்; அறநூல்களையும் அரசியல் நூல்களையும் கற்று வேண்டுவன விலக்குவன அறிதலும்; முயற்சி யோடுகூடிய; ஐங்கூறுகளும் ஒருங்கே சிறப்பாக அமைந்தவனே அமைச்சனாவான்.



மு. வரதராசனார் உரை

அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.



G.U. Pope’s Translation

A minister must greatness own of guardian power, determined mind. Learn’d wisdom, manly effort with the former five combined.

 – Thirukkural: 632, The Officeof Minister of State, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.