வான்உயர் தோற்றம் எவன்செய்யும் – குறள்: 272

Thiruvalluvar

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்ற படின். – குறள்: 272

– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்



கலைஞர் உரை

தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்
துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை ஒருவன் செய்வானாயின்; அவனது வானளாவ வுயர்ந்த தவக் கோலம் பிறரை அச்சுறுத்துவதன்றி வேறு என்ன பயன்படுவதாம்?



மு. வரதராசனார் உரை

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?



G.U. Pope’s Translation

What gain, thought virtues’ semblance high as heaven his fame exalt, If heart dies down through sense of self-detected fault?

 – Thirukkural: 272, Inconsistent Conduct, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.