வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் – குறள்: 919

Thiruvalluvar

வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் புரைஇலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
குறள்: 919

– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.



கலைஞர் உரை

விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச்
சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் வேறுபாடு பற்றி ஒருவரையும் விலக்காது பொருள் கொடுத்தார் யாவரையுந் தழுவும் விலைமகளிரின் மெல்லிய தோள்கள்; அக்குற்றத்தை யறியும் உயர்வில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகாம்.



மு. வரதராசனார் உரை

ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.



G.U. Pope’s Translation

The wanton’s tender arm, with gleaming jewels decked, Is hell,where sink degraded souls of men abject.

Thirukkural: 919, Wanton Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.