குருவிரொட்டி இணைய இதழ்

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று – குறள்: 221


வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
– குறள்: 221

– அதிகாரம்: ஈகை, பால்: அறம்



கலைஞர் உரை

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச் செயலாம்; மற்றக் கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.



மு. வரதராசனார் உரை

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.



G.U. Pope’s Translation

call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.

 – Thirukkural: 221, Giving, Virtues