வரும்முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். – குறள்: 435
– அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காத அரசனது வாழ்க்கை; அது நேர்ந்தவுடன் நெருப்பு முகத்து நின்ற வைக்கோற்போர்போல அழிந்து விடும்.
மு. வரதராசனார் உரை
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.
G.U. Pope’s Translation
His joy who guards not ‘gainst the coming evil day, Like straw before the fire shall swift consume away.
– Thirukkural: 435, The Correction of Faults , Wealth
Be the first to comment