வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின். – குறள்: 238
– அதிகாரம்: புகழ், பால்: அறம்
கலைஞர் உரை
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது
அந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இசை என்னும் எச்சம் பெறாவிடின்-ஒருவன் புகழைத் தனக்குப் பின் நிறுத்தாவிடின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப- அது உலகத்திலுள்ள மக்கட் கெல்லாம் பழிப்பாகு மென்று கூறுவர் நல்லோர்.
மு. வரதராசனார் உரை
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைக் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
G.U. Pope’s Translation
Fame is virtue’s child, they say; if, then,
You childless live, you live the scorn of men.
– Thirukkural: 238, Renown, Virtues
Be the first to comment