வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம். – குறள்: 239
– அதிகாரம்: புகழ், பால்: அறம்
கலைஞர் உரை
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்,
இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இசை இலா யாக்கை பொறுத்த நிலம்-புகழைச் செய்யாத வுடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும்.
மு. வரதராசனார் உரை
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
G.U. Pope’s Translation
The blameless fruits of fields ‘increase will dwindle down,
If earth the burthen bear of men without renown.
– Thirukkural: 239, Renown, Virtues
Be the first to comment