வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது. – குறள்: 865
– அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள்.
கலைஞர் உரை
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வினைகளைச் செய்யும் வழிகளை ஆய்ந்தறியாதவனாகவும்; தப்பாது வாய்க்கும் வினைகளை மேற்கொள்ளாதவனாகவும்; தீயன செய்யின் தனக்கு வரும் பழியைக் கருதாதவனாகவும்; பிறரியல்பையறிந்து அதற்கேற்ப நடக்கும் நற்குணமில்லாதவனாகவும் இருப்பவனது பகை; அவன் பகைவர்க்கு இனிதாகும்.
மு. வரதராசனார் உரை
ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன் பகைவர்க்கும் எளியனாவான்.
G.U. Pope’s Translation
No way of right he scans, no precepts blind, no crimes affright,
No grace of good he owns; such man’s his foes’ delight.
– Thirukkural: 865, The might of Hatred, Wealth.