குருவிரொட்டி இணைய இதழ்

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் – குறள்: 665


வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறுஎய்தி உள்ளப் படும்.
– குறள்: 665

– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்



கலைஞர் உரை

செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட அமைச்சரின் வினைத்திண்மை; பயனளவில் அரசனையடைதலால் அவனாலும் பிறராலும் மதிப்பொடு கருதப்பெறும்.



மு. வரதராசனார் உரை

செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.



G.U. Pope’s Translation

The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state.

 – Thirukkural: 665, Power of Action, Wealth