வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு. – குறள்: 595
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அது போல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவாகும்; அது போல மாந்தரின் வாழ்வுயர்ச்சி அவருடைய ஊக்கத்தின் அளவாகும்.
மு. வரதராசனார் உரை
நீர்ப்பூக்களின் தாளின் நீளம், அவை நின்ற நீரின் அளவினவாகும்; மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் அவர்களுடைய வாழ்க்கையின் உயர்வு.
G.U. Pope’s Translation
With rising flood the rising lotus flower its stem unwinds, The dignity of men is measured by their mind.
– Thirukkural: 595, Energy, Wealth