குருவிரொட்டி இணைய இதழ்

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் – குறள்: 177


வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதுஆம் பயன்.
– குறள்: 177

– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த
வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க ; பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதலில்லையாதலின்.



மு. வரதராசனார் உரை

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.



G.U. Pope’s Translation

Seek not increase by greed of gain acquired;
That fruit matured yeilds never good desired.

 – Thirukkural: 177, Not Coveting, Virtues