குருவிரொட்டி இணைய இதழ்

வேண்டற்க வென்றிடினும் சூதினை – குறள்: 931


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.
குறள்: 931

– அதிகாரம்: சூது, பால்: பொருள்.



கலைஞர் உரை

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த
வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும்
விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக்
கொண்டது போலாகிவிடும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தான்வெல்லுந் திறமையும் வாய்ப்பும் உடையனாயினும் சூதாட்டை விரும்பற்க ; வென்று பொருள் பெற்றதும் இரையால் மறைக்கப்பட்ட தூண்டில் முள்ளை இரையென்று கருதி மீன் விழுங்கினாற் போன்றதே.



மு. வரதராசனார் உரை

வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.



G.U. Pope’s Translation

Seek not the gramester’s play; though you should win,
Your gain is as the baited hook the fish takes in.

Thirukkural: 931, Gambling , Wealth.