குருவிரொட்டி இணைய இதழ்

வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் – குறள்: 265


வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம்
ஈண்டு முயலப் படும். – குறள்: 265

– அதிகாரம்: தவம், பால்: அறம்



கலைஞர் உரை

உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய
முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தவத்தின் பயனாக மறுமையில் தாம் விரும்பிய பேறுகளையெல்லாம் விரும்பியவாறே பெறக்கூடிய நிலைமையிருத்தலால்; செய்ய வேண்டிய தவம் இம்மையில் அறிவுடையோரால் முயன்று செய்யப்படும்.



மு. வரதராசனார் உரை

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.



G.U. Pope’s Translation

That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful ‘penance’ done.

 – Thirukkural: 265, Penance, Virtues