குருவிரொட்டி இணைய இதழ்

வில்ஏர் உழவர் பகைகொளினும் – குறள்: 872


வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை.
குறள்: 872

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.



கலைஞர் உரை

படைக்கலன்களை உடைய வீரர்களிடம்கூடப் பகை கொள்ளலாம்.
ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை
கொள்ளக் கூடாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய பொருநரொடு பகை கொண்டாலும்; சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞரொடு பகைகொள்ளா திருக்க.



மு. வரதராசனார் உரை

வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது..



G.U. Pope’s Translation

Although you hate incur of those whose ploughs are bows, Make not the men whose ploughs are words your foes!

Thirukkural: 872, Knowing the Quality of Hate, Wealth.