விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்து ஒழுகுவார். – குறள்: 143
– அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம்
கலைஞர் உரை
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்
ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின் கண் தீவினை செய்தலை விரும்பியொழுகுவார் ; உறுதியாக ;இறந்தாரின் வேறுபட்டவரல்லர் .
மு. வரதராசனார் உரை
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.
G.U. Pope’s Translation
They ‘re numbered with the dead, e’en while they live-how otherwise? With wife of sure confiding friend who evil things devise.
– Thirukkural: 143,Not Coveting Another’s Wife, Virtues
Be the first to comment