குருவிரொட்டி இணைய இதழ்

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் – குறள்: 584


வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
– குறள்: 584

– அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர்,
வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல்
பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசியல் வினைஞர், அரசின் உறவின்முறையார் ,பகைவர் என்று சொல்லப்படும் எல்லாரையும் சொற் செயல் பொருட்களால் மறைவாக ஆராய்வானே ; சரியான ஒற்றனாவான்.



மு. வரதராசனார் உரை

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.



G.U. Pope’s Translation

His officers, his friends, his enemies,
All these who watch are trusty spies.

 – Thirukkural: 584, Detectives, Wealth