வினைபகை என்றிரண்டின் எச்சம் – குறள்: 674

Thiruvalluvar

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
– குறள்: 674

– அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஆராய்ந்து பார்க்குமிடத்து; செய்யத் தொடங்கிய வினை, ஒழிக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டிலும் விட்டு வைத்த குறை; அவிக்காது விட்டு வைத்த தீயின் குறை போலப் பின் வளர்ந்து தம்மை விட்டுவைத்தவரை அழித்து விடும்.



மு. வரதராசனார் உரை

செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.



G.U. Pope’s Translation

With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, ’twill ruin bring.

 – Thirukkural: 674, The Method of Acting, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.