குருவிரொட்டி இணைய இதழ்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் – குறள்: 13


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
– குறள்: 13

– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்



கலைஞர் உரை

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்துவிட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேண்டிய காலத்து மழை பெய்யாது நின்றுவிடுமாயின், பரந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற நிலவுலகத்தின்கண், பசி நிலைத்துநின்று உயிர்களை வருத்தும்.



மு. வரதராசனார் உரை

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.



G.U. Pope’s Translation

If clouds. The promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o’er earth’s vast ocean-girdled plain.

 – Thirukkural: 13, The Excellence of Rain, Virtues