விருந்து புறத்ததாத் தானுண்டல் – குறள்: 82

Thiruvalluvar

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.
– குறள்: 82

– அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம்



கலைஞர் உரை

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக
இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க
பண்பாடல்ல.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உண்ணப் படும் உணவு சாவை நீக்கும் மருந்தே யெனினும்; விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்துண்டல் விரும்பத்தக்க தன்று.



மு. வரதராசனார் உரை

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.



G.U. Pope’s Translation

Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred.

 – Thirukkural: 82, Cherishing Guests, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.