
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. – குறள்: 16
– அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்
கலைஞர் உரை
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை
காண்பது அரிதான ஒன்றாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வானத்தினின்று மழைத்துளி விழுந்தாலன்றி பின் அப்பொழுதே பசும்புல் நுனியையும் காண்பது அரிதாகும்.
மு. வரதராசனார் உரை
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
Be the first to comment