குருவிரொட்டி இணைய இதழ்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை – குறள்: 439


வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
– குறள்: 439

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறிவாற்றல்களிலும் இடம் பொருளேவல்களிலும் தான் மிகவுயர்ந்தபோதும் தன்னை மெச்சிச் செருக்குறா தொழிக; தனக்கும் தன்நாட்டிற்கும் நன்மை தராத செயல்களை மானத்தினா லேனும் செருக்கினாலேனும் இன்பங்கருதியேனும் விரும்பா தொழிக.



மு. வரதராசனார் உரை

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.



G.U. Pope’s Translation

Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yeilds no gain of good.

 – Thirukkural: 439, The Correction of Faults , Wealth