விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஓட்டுஅன்றோ வன்க ணவர்க்கு. – குறள்: 775
– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்
கலைஞர் உரை
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து
விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பகைவரைச் சினந்து நோக்கி விரிவாகத் திறந்தகண்; அவர் ஒளிவீசும் வேலைப் பளிச்சென் றெறிய, அதற்குக் கூசி முன்னை நிலைக்கு மாறாக இமை கொட்டின்; அதுவும் உண்மை மறவர்க்குப் புறங்கொடுத்தலாகுமன்றோ!.
மு. வரதராசனார் உரை
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?
G.U. Pope’s Translation
To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear.
– Thirukkural: 775, Military Spirit, Wealth