குருவிரொட்டி இணைய இதழ்

விழையார் விழையப் படுப – குறள்: 810


விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
– குறள்: 810

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம்
தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பழைமையான நண்பர் தவறு செய்தாராயினும் அவரிடத்துத் தம் நட்புத் தன்மையினின்றும் மாறுபடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.



மு. வரதராசனார் உரை

(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்.



G.U. Pope’s Translation

III-wishers even wish them well, who guard,
For ancient friends, their wonted kind regard.

Thirukkural: 810, Familiarity, Wealth