விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.– குறள்: 162
– அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம்
கலைஞர் உரை
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப்
பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை ஒருவன் பெறுமாயின்; அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை யொப்பது வேறு ஒன்றும் இல்லை.
மு. வரதராசனார் உரை
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
G.U. Pope’s Translation
If man can learn to envy none on earth,
‘Tis richest gift, -beyond compare its worth.
– Thirukkural: 162, Not envying, Virtues