யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற. – குறள்: 300
– அதிகாரம்: வாய்மை, பால்: அறம்
கலைஞர் உரை
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எவ்வகையிலும்; மெய்ம்மைபோலச் சிறந்த அறங்கள் வேறில்லை.
மு. வரதராசனார் உரை
யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத் தக்கவை வேறு இல்லை.
G.U. Pope’s Translation
Of all good things we’ve scanned with studious care, There’s nought that can with truthfulness compare.
– Thirukkural: 300, Veracity, Virtues