தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் – தமிழின் சிறப்பு
தமிழில் ஓர் எழுத்தில் அமையும் சொற்கள் எத்தனை உள்ளன என்று தெரியுமா? நம்மில் பலர் அத்தகைய சில சொற்களை அறிந்திருப்போம். உங்களுக்குத் தெரிந்த ஓரெழுத்துச் சொற்களை எண்ணிப் பாருங்கள்! இந்தப் பகுதியைப் படித்த பின், நாம் அறியாத சொற்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளது என்பதும், அவை என்னென்ன என்பதும் நமக்குத் தெரிய வரும்!
ஓர் எழுத்து மட்டுமே சொல்லாக அமைந்து பொருள் தந்தால், அதற்கு ஓரெழுத்து ஒரு மொழி என்று பெயர். தமிழ் இலக்கண நூல்களில் ஒன்றான நன்னூலில், மொத்தம் 42 ஓரெழுத்துச் சொற்கள் தமிழில் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாற்பத்தியிரண்டு சொற்களில், நொ மற்றும் து ஆகிய இரண்டு சொற்களைத் தவிர, மற்ற நாற்பது சொற்களும் நெடிலாக அமைந்துள்ளன.
ஓர் எழுத்து மட்டுமே பொருள் தரும் சொற்கள் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் அமைந்திருப்பது நம் செந்தமிழின் சிறப்புகளில் ஒன்று.
கீழ்க்கண்ட பட்டியலில் நாற்பத்தியிரண்டு ஓரெழுத்துச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
- ஆ (பசு)
- ஈ (கொடு, படை, ஈனு, பூச்சி – பறக்கும் ஈ, தேனீ)
- ஊ (இறைச்சி)
- ஏ (அம்பு)
- ஐ (தலைவன்)
- ஓ (மதகுநீர் தாங்கும் பலகை)
- கா (சோலை)
- கூ (பூமி)
- கை (ஒழுக்கம், கரம்)
- கோ (அரசன்)
- சா (இறந்துபோ)
- சீ (இகழ்ச்சி)
- சே (உயர்வு)
- சோ (மதில்)
- தா (கொடு)
- தீ (நெருப்பு)
- தூ (தூய்மை)
- தே (கடவுள்)
- தை (தைத்தல், தை மாதம்)
- நா (நாவு)
- நீ (முன்னிலை ஒருமை)
- நோ (அன்பு)
- நை (இழிவு)
- நோ (வறுமை)
- பா (பாடல்)
- பூ (மலர்)
- பே (மேகம்)
- பை (இளமை, பசுமை, கொள்கலம்)
- போ (செல்)
- மா (மரம்)
- மீ (வான், மிகுதி)
- மூ (மூப்பு)
- மே (அன்பு)
- மை (அஞ்சனம்)
- மோ (முகத்தல்)
- யா (அகலம்)
- வா (அழைத்தல்)
- வீ (மலர்)
- வை (புல், இடு)
- வௌ (கவர்)
- நொ (நோய்)
- து (உண்)
Be the first to comment