விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students)
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) பயிலும் மாணவர்களுக்கு கணிதம் தொடர்பான கேள்வி பதில்களைக் குருவிரொட்டி தொடர்ந்து வெளியிடவுள்ளது. மாணவர்களே! அவ்வப்போது வெளியிடப்படும் வினா-விடைகளைப் படித்து பயன்பெறுங்கள்!
- ஒரு மீட்டர் (மீ) அளவில் எத்தனை சென்டிமீட்டர்கள் (செ.மீ) இருக்கும்?
- விடை: 100 செமீ
- ஒரு சென்டிமீட்டர் அளவில் எத்தனை மில்லிமீட்டர்கள் (மி.மீ) இருக்கும்?
- விடை: 10 மிமீ
- சென்னைக்கும் மதுரைக்கும் உள்ள தொலைவை எந்த அளவில் குறிக்கவேண்டும்?
- விடை: கிலோமீட்டர் (கிமீ)
- ஒரு கிலோமீட்டர் (கிமீ) அளவில் எத்தனை மீட்டர்கள் (மீ) இருக்கும்?
- விடை: 1000 மீ
- கீழேயுள்ள கடிகாரம் எத்தனை மணி மற்றும் நிமிடங்களைக் குறிக்கிறது?
- இதற்கான விடையை நீங்களே கண்டறியுங்கள்!
- எழிலன் ஒரு வட்டமான தோசையை நான்கு சம பங்குகளாகப் பிரித்து, அவன் நண்பன் வளவனுக்குக் கொடுக்கிறான். வளவனிடம் உள்ள தோசையின் பங்கு என்ன என்பதை பின்னத்தில் (Fraction) குறிக்கவும்?
- விடை: 1/4
- வளவனுக்கு ஒரு பங்கு கொடுத்தபின், எழிலனிடம் எவ்வளவு பங்கு மீதம் இருக்கும் என்பதை பின்னத்தில் (Fraction) குறிக்கவும்?
- விடை: 3/4
- கதிர் ஒரு வரிசையில் நிற்கிறான். அவனுக்கு முன்பக்கம் 12 பேர் மற்றும் பின்பக்கம் 12 பேர் இருக்கிறார்கள் என்றால் அந்த வரிசையில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?
- விடை: 25
- ∇ = 6, ∅ = 15, ♠ = 10 எனில், ∅ – (2 x ∇) + (3 x ♠) = ?
- விடை: 33
- கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எது பெரிய எண்?
- (அ) 1/4 (ஆ) 1/32
- விடை: (அ) 1/4
(தொடரும்…