நீலத்திமிங்கலம் – Blue Whale – சிறுவர்களுக்கான பொது அறிவு
உலகிலேயே மிகப்பெரிய விலங்கு எது? ஆம்! நீலத் திமிங்கலம் (Blue Whale) தான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள்.
- நீலத் திமிங்கலம் (Blue Whale) கடலில் வாழும் பாலூட்டி (Marine Mammal) வகையைச் சார்ந்தது.
- இது 80 முதல் 100 அடி நீளம் வரை இருக்கும்.
- இதன் எடை 150 டன்கள் (அதாவது, 1,50,000 கிலோகிராம்) வரை இருக்கும்.
- நீலத் திமிங்கலத்தின் குட்டி பிறக்கும்போதே 2 டன்கள் (அதாவது, 2 ஆயிரம் கிலோகிராம்) வரை இருக்குமாம்!
- இது 80 முதல் 90 ஆண்டுகள் வரை வாழும். இதுவரை கண்டறியப்பட்ட நீலத் திமிங்கலத்தின் அதிகபட்ச வயது 110 ஆண்டுகள்.
- இது எழுப்பும் ஒலி ஜெட் விமானத்தின் எந்திரத்தின் ஒலியை விட அதிகமாக இருக்கும். அதாவது, ஏறத்தாழ 188 டெசிபிள்கள்.
ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை சராசரியாக 30 வளர்ந்த யானைகளின் எடைக்குச் சமமாக இருக்கும்.
க்ரில் எனப்படும் சிறு இறால் வகை மீன்களை திமிங்கலங்கள் விரும்பி உண்ணும். ஒரு நாளுக்கு ஒரு திமிங்கலம் உண்ணும் உணவின் எடை ஏறத்தாழ 4 டன்கள் (4,000 கிலோகிராம்) வரை இருக்கும். அதாவது ஒரு யானையின் எடைக்குச் சமமான ஒரு க்ரில் மீன் கூட்டத்தை உண்ணும்.
ஒரு நீலத் திமிங்கலத்தின் நாக்கு ஏறத்தாழ 2.7 டன்கள் (2700 கிலோகிராம்) வரை இருக்கும். இது ஒரு வளர்ந்த பெண் யானையின் எடைக்குச் சமம்.
ஒரு திமிங்கலத்தின் எடை, 3000 மனிதர்களின் எடைக்குச் (சராசரியாக 50 கிலோகிராம் எடையுள்ள மனிதனைப்போல்) சமமாக இருக்கும்.
மேலும் நீலத் திமிங்கலங்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளிக்காட்சியை சொடுக்கிப் பார்க்கவும்: