குருவிரொட்டி இணைய இதழ்

சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)

சொற்கள் அறிவோம் – பயிற்சி-1 – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)

கீழே இரண்டிரண்டு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உரத்த குரலில் உச்சரித்து அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறியுங்கள் பார்ப்போம்! இந்தப்பயிற்சியை மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் முயற்சிக்கலாம். உதவி தேவைப்படின், பெற்றோர் அல்லது ஆசிரியரின் உதவியுடன் இப்பயிற்சியை மேற்கொள்க!

இப்பயிற்சியின் முடிவில், மாணவர்களுக்கு ஐயம் ஏற்படுத்தும் வகையில் ஒன்று போல் தோற்றமளிக்கும் இரு வேறுபட்ட சொற்களுக்கு உள்ள வேறுபாடுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகளே! பொதுவாக ஒன்று போல் மாயத்தோற்றமளிக்கும் சொற்களை நீங்கள் கூர்ந்து நோக்கி, அவற்றை சரியாக உச்சரித்துப் பழக வேண்டும். அப்போது, உண்மையில் ஒலி, எழுத்து மற்றும் பொருள் அளவில் அச்சொற்கள் வேறுபட்டு இருப்பதை நீங்கள் நன்கு உணரலாம்!

வரிசை எண்முதல் சொல்இரண்டாவது சொல்
1கண்காண்
2கல்கால்
3படம்பட்டம்
4பல்லிபள்ளி
5படிபடு
6வடுவடி
7வடுவாடு
8கொடுகோடு
9கொக்குகொக்கி
10வலிவளி
11அழகுஅலகு
12பல்பால்
13பட்டுபாட்டு
14வட்டம்வாட்டம்
15அரைஅறை
16அரம்அறம்
17களம்கலம்
18கோல்கோள்
19கொடைகோடை
20குடைகொடை
21குடம்கூட்டம்
22வழுக்குவழக்கு
23கலம்காலம்
24பசிபாசி
25கொள்கோள்
26கொளத்தூர்கௌதாரி
27எரிஎறி
28எரிஏரி
29கரிகறி
30தண்டுதாண்டு
31கெண்டைகொண்டை
32வடைவாடை
33தடைதாடை
34குழம்புகுளம்பு
35வழிவலி
36கடைகாடை
37கலைகளை
38களைகாளை
39அணைஆணை
40வெல்லம்வெள்ளம்
41ஒலிஒளி
42பனிபணி
43மழைமலை
44பதம்பாதம்
45மனம்மணம்
46வனம்வானம்
47கனம்கணம்
48சட்டைசாட்டை