எண் – ஒருமை, பன்மை (வகுப்பு 3 முதல் 5 வரை)
மாணவர்களே! ஒருமை, பன்மை என்றால் என்ன என்பதையும், அவற்றிற்கான உதாரணங்கள் சிலவற்றையும், இந்தப் பகுதியில் பார்ப்போம்.
ஒருமை
ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு விலங்கு அல்லது பறவை அல்லது தாவரம் அல்லது பொருளைப் பற்றியோ குறிப்பிடும் சொல் ஒருமை எனப்படும். அதாவது ஒருவரைப் பற்றி அல்லது ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவது ஒருமை.
எடுத்துக்காட்டு: அங்கே ஒரு ஆடு மேய்கிறது.
பன்மை
ஒன்றிற்கு மேற்பட்ட பல மனிதர்களைப் பற்றியோ, விலங்குகள் அல்லது பறவைகள் அல்லது பொருட்களைப் பற்றியோ குறிப்பிடும் சொல் பன்மை எனப்படும். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட பலரைப்பற்றி அல்லது பலவற்றைப் பற்றிக் குறிப்பிடுவது பன்மை. பெரும்பாலும், பன்மையில் குறிப்போடும் போது “கள்” எனும் விகுதியுடன் முடியும்.
எடுத்துக்காட்டு: அங்கே இரண்டு ஆடுகள் மேய்கின்றன.
பயிற்சி
கீழேயுள்ள அட்டவணையில் உள்ள சொற்களின் ஒருமை பன்மை வேறுபாட்டை படித்து, அறிந்து கொண்டு, இதே போல் உங்களுக்குத் தெரிந்த சில பொருட்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றிற்கு ஒருமை பன்மை சொற்களைக் கண்டறிக.
வரிசை எண் | ஒருமை | பன்மை |
1 | மனிதன் | மனிதர்கள் |
2 | விலங்கு | விலங்குகள் |
3 | பறவை | பறவைகள் |
4 | தாவரம் | தாவரங்கள் |
5 | மலை | மலைகள் |
6 | ஆண் | ஆண்கள் |
7 | பெண் | பெண்கள் |
8 | முதியவர் | முதியவர்கள் |
9 | பெரியவர் | பெரியவர்கள் |
10 | குழந்தை | குழந்தைகள் |
11 | சிறுவன் | சிறுவர்கள் |
12 | சிறுமி | சிறுமிகள் |
13 | ஆசிரியர் | ஆசிரியர்கள் |
14 | மாணவன் | மாணவர்கள் |
15 | மாணவி | மாணவிகள் |
16 | உழவன் | உழவர்கள் |
17 | அறிஞன் | அறிஞர்கள் |
18 | கலைஞன் | கலைஞர்கள் |
19 | நான் | நாங்கள் / நாம் |
20 | நீ | நீங்கள் |
21 | அவன் | அவர்கள் |
22 | அவள் | அவர்கள் |
23 | அவர் | அவர்கள் |
24 | தோழன் | தோழர்கள் |
25 | தோழி | தோழிகள் |
26 | கண் | கண்கள் |
27 | காது | காதுகள் |
28 | கை | கைகள் |
29 | கால் | கால்கள் |
30 | பல் | பற்கள் |
31 | அது | அவை |
32 | நாய் | நாய்கள் |
33 | மாடு | மாடுகள் |
34 | பசு | பசுக்கள் |
35 | குரங்கு | குரங்குகள் |
36 | கிளி | கிளிகள் |
37 | மயில் | மயில்கள் |
38 | காகம் | காகங்கள் |
39 | மரம் | மரங்கள் |
40 | செடி | செடிகள் |
41 | கொடி | கொடிகள் |
42 | கல் | கற்கள் |
43 | நாற்காலி | நாற்காலிகள் |
Be the first to comment