குருவிரொட்டி இணைய இதழ்

சொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)

எண் – ஒருமை, பன்மை (வகுப்பு 3 முதல் 5 வரை)

மாணவர்களே! ஒருமை, பன்மை என்றால் என்ன என்பதையும், அவற்றிற்கான உதாரணங்கள் சிலவற்றையும், இந்தப் பகுதியில் பார்ப்போம்.

ஒருமை

ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு விலங்கு அல்லது பறவை அல்லது தாவரம் அல்லது பொருளைப் பற்றியோ குறிப்பிடும் சொல் ஒருமை எனப்படும். அதாவது ஒருவரைப் பற்றி அல்லது ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவது ஒருமை.

எடுத்துக்காட்டு: அங்கே ஒரு ஆடு மேய்கிறது.


பன்மை

ஒன்றிற்கு மேற்பட்ட பல மனிதர்களைப் பற்றியோ, விலங்குகள் அல்லது பறவைகள் அல்லது பொருட்களைப் பற்றியோ குறிப்பிடும் சொல் பன்மை எனப்படும். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட பலரைப்பற்றி அல்லது பலவற்றைப் பற்றிக் குறிப்பிடுவது பன்மை. பெரும்பாலும், பன்மையில் குறிப்போடும் போது “கள்” எனும் விகுதியுடன் முடியும்.

எடுத்துக்காட்டு: அங்கே இரண்டு ஆடுகள் மேய்கின்றன.


பயிற்சி

கீழேயுள்ள அட்டவணையில் உள்ள சொற்களின் ஒருமை பன்மை வேறுபாட்டை படித்து, அறிந்து கொண்டு, இதே போல் உங்களுக்குத் தெரிந்த சில பொருட்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றிற்கு ஒருமை பன்மை சொற்களைக் கண்டறிக.

வரிசை எண்ஒருமைபன்மை
1மனிதன்மனிதர்கள்
2விலங்குவிலங்குகள்
3பறவைபறவைகள்
4தாவரம்தாவரங்கள்
5மலைமலைகள்
6ஆண்ஆண்கள்
7பெண்பெண்கள்
8முதியவர்முதியவர்கள்
9பெரியவர்பெரியவர்கள்
10குழந்தைகுழந்தைகள்
11சிறுவன்சிறுவர்கள்
12சிறுமிசிறுமிகள்
13ஆசிரியர்ஆசிரியர்கள்
14மாணவன்மாணவர்கள்
15மாணவிமாணவிகள்
16உழவன் உழவர்கள்
17அறிஞன்அறிஞர்கள்
18கலைஞன்கலைஞர்கள்
19நான்நாங்கள் / நாம்
20நீநீங்கள்
21அவன்அவர்கள்
22அவள்அவர்கள்
23அவர்அவர்கள்
24தோழன்தோழர்கள்
25தோழிதோழிகள்
26கண்கண்கள்
27காதுகாதுகள்
28கைகைகள்
29கால்கால்கள்
30பல்பற்கள்
31அதுஅவை
32நாய்நாய்கள்
33மாடுமாடுகள்
34பசுபசுக்கள்
35குரங்குகுரங்குகள்
36கிளிகிளிகள்
37மயில்மயில்கள்
38காகம்காகங்கள்
39மரம்மரங்கள்
40செடிசெடிகள்
41கொடிகொடிகள்
42கல்கற்கள்
43நாற்காலிநாற்காலிகள்