திசை – (பாரதிதாசன்)
கதிர் முளைப்பது கிழக்கு – அதன்
எதிர் இருப்பது மேற்கு
முதிர் இமயம் வடக்கு – அதன்
எதிர் குமரி தெற்கு.
கதிர் முளைப்பது கிழக்கு – அதன்
எதிர் இருப்பது மேற்கு
முதிர் இமயம் வடக்கு – அதன்
எதிர் குமரி தெற்கு.
விளக்கம்:
நான்கு திசைகள் உள்ளன:
1. கிழக்கு (சூரியன் உதிக்கும் திசை)
2. மேற்கு (சூரியன் மறையும் திசை)
3. வடக்கு (இமயமலை இருக்கும் திசை)
4. தெற்கு (குமரி முனை – அதாவது கன்னியாகுமரி நகரம் இருக்கும் திசை )