தமிழ் கற்போம் – எளிய முறையில் தமிழ்க் கல்வி – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணையவழிக் கல்வி – சிறுவர் பகுதி
தமிழறிஞர் முனைவர் மா. நன்னன் அவர்கள், குழந்தைகள் தமிழ் எழுத்துகளை தவறில்லாமல் உச்சரிக்கவும், எழுதவும், தனக்கே உரிய அழகிய நடையில், தமிழ் கற்றுக்கொடுக்கிறார். அவரது நகைச்சுவை கலந்த இனிக்கும் பேச்சையும், எளிமையான விளக்கத்தையும், புதிய அணுகுமுறையில் தமிழ் எழுத்துகள் மற்றும் சொற்களைக் கற்றுக் கொடுக்கும் முறையையும், பார்க்கும்போது குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். மேலும் குழந்தைகள் விரைவில் தவறில்லாமல் பேசவும் எழுதவும் நன்னன் முறை வழிவகுக்கும்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குழந்தைகள் எளிதாக தமிழ் கற்றுக் கொள்ளும் விதமாக, புலவர் மா. நன்னனின் இணையவகுப்புகளை பல்வேறு காணொளித் தொகுப்புகளாக, தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட இணைய முவரியைச் சொடுக்கி, தமிழ்ப் பாடவகுப்புகளின் காணொளிக்காட்சிகளைக் காணலாம்.
தமிழ்க்கல்வி – தமிழ் கற்போம் – முனைவர் மா. நன்னன்