மெய்யெழுத்துக்கள் – பாரதிதாசன் கவிதை
செக்குக்கு நடுவெழுத்தே க்
செக்கு
சங்குக்கு நடுவெழுத்தே ங்
சங்கு
உச்சிக்கு நடுவெழுத்தே ச்
உச்சி
பஞ்சுக்கு நடுவெழுத்தே ஞ்
பஞ்சு
தட்டுக்கு நடுவெழுத்தே ட்
தட்டு
கண்ணுக்குப் பின்னெழுத்தே ண்
கண்
சித்திக்கு நடுவெழுத்தே த்
சித்தி
பந்துக்கு நடுவெழுத்தே ந்
பந்து
சீப்புக்கு நடுவெழுத்தே ப்
சீப்பு
பாம்புக்கு நடுவெழுத்தே ம்
பாம்பு
நாய் என்றால் பின்னெழுத்தே ய்
நாய்
தேர் என்றால் பின்னெழுத்தே ர்
தேர்
வேல் என்றால் பின்னெழுத்தே ல்
வேல்
செவ்வை என்றால் பின்னெழுத்தே வ்
செவ்வை (இதன் பொருள்: மிகுதி, நிறைய)
யாழ் என்றால் பின்னெழுத்தே ழ்
யாழ்
புள்ளி என்றால் நடுவெழுத்தே ள்
புள்ளி
ஏற்றமென்றால் நடுவெழுத்தே ற்
ஏற்றம் (இதன் பொருள்: மேலே ஏறுதல்)
மான் என்றால் பின்னெழுத்தே ன்.
மான்
க் முதல் ன் வரை மொத்தம் 18 மெய்யெழுத்துக்கள் உள்ளன.
க்
ங்
ச்
ஞ்
ட்
ண்
த்
ந்
ப்
ம்
ய்
ர்
ல்
வ்
ழ்
ள்
ற்
ன்
குறிப்பு / விளக்கம்:
மேலே உள்ள பாரதிதாசன் கவிதையில், “வ்” என்ற எழுத்துக்கு கொடுக்கப்பட்ட சொல்லைத் (செவ்வை) தவிர, பிற சொற்களின் பொருளை, அவற்றின் விளக்கப் படங்களைப் பார்த்தாலே குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியும்.
“வ்” என்ற எழுத்துக்கு “செவ்வை” என்ற சொல்லை, கவிஞர் உதாரணமாக கொடுத்துள்ளார். அதன் பொருள் “மிகுதி”. அதனால் மிகுதியாக, அதாவது நிறைய பூக்கள் அடங்கிய படம் விளக்கப் படமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் அல்லது, ஆசிரியர்கள், “செவ்வை” என்ற சொல்லுக்குப் பொருளை, குழந்தைகளுக்குப் புரியும்படி, அதன் விளக்கப் படத்தைத் தொடர்பு படுத்தி விளக்கிக் கூறவும்.