
டாமினோ – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
வண்ண வண்ண டாமினோ
வரிசை யாக டாமினோ!
பல வடிவ வரிசையில்
அடுக்கி வைத்த டாமினோ
பல லட்சம் அட்டைகள்
அடுக்கி வைத்த டாமினோ
தட்டிப் பார்த்து மகிழவே
சரிந்து விழும் டாமினோ!
வண்ண வண்ண டாமினோ
வரிசை யாக டாமினோ!
பல வடிவ வரிசையில்
அடுக்கி வைத்த டாமினோ
பல லட்சம் அட்டைகள்
அடுக்கி வைத்த டாமினோ
தட்டிப் பார்த்து மகிழவே
சரிந்து விழும் டாமினோ!
வீடு எங்கே? – சின்னஞ்சிறு பாடல்கள் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை வண்ணக் கிளியே, வீடெங்கே?மரத்துப் பொந்தே என்வீடு. தூக்கணாங் குருவி, வீடெங்கே?தொங்குது மரத்தில் என்வீடு. கறுப்புக் காகமே, வீடெங்கே?கட்டுவேன் மரத்தில் என்வீடு. பொல்லாப் பாம்பே, வீடெங்கே?புற்றும் புதருமே என்வீடு. கடுகடு சிங்கமே, வீடெங்கே?காட்டுக் குகையே [ மேலும் படிக்க …]
பட்டணம் போகிற மாமா – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி பட்டணத்தைப் பார்க்கப்போகும்சின்னமாமா – இந்தப்பையனைநீ மறந்திடாதே,சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல்சின்னமாமா – அந்தப்பட்டணத்தில் வாங்கிவாராய்,சின்னமாமா. அக்காளுக்கு ரப்பர்வளைசின்னமாமா – அங்கேஅழகழகாய் வாங்கிவாராய்,சின்னமாமா. பிரியமுள்ள அம்மாவுக்கு,சின்னமாமா – நல்லபெங்களூருச் சேலைவேண்டும்,சின்னமாமா. அப்பாவுக்குச் சட்டைத்துணிசின்னமாமா – [ மேலும் படிக்க …]
நாய்க்குட்டி – பாப்பாவுக்குப் பாட்டு – சிறுவர் பகுதி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா கவிதை தோ… தோ… நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி. உன்னைத் தானே நாய்க்குட்டி,ஓடி வாவா நாய்க்குட்டி. கோபம் ஏனோ நாய்க்குட்டி?குதித்து வாவா நாய்க்குட்டி. கழுத்தில் மணியைக் கட்டுவேன்; கறியும் சோறும் போடுவேன். இரவில் இங்கே [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment