எண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி
வேலா எவர்க்கும் தலை ஒன்று
மெய்யாய் எவர்க்கும் கண் இரண்டு
சூலத்தின் முனையோ மூன்று
துடுக்கு நாயின் கால் நான்கு
வேலா உன்கை விரல் ஐந்து
மின்னும் வண்டின் கால் ஆறு
வேலா ஒருகைவிர லுக்கு
மேலே இரண்டு விரல் ஏழு
சிலந்திக் கெல்லாம்கால் எட்டே
சிறுகை விரலும்நால் விரலும்
கலந்தால் அதன்பேர் ஒன்பது
காண்பாய் இருகை விரல் பத்தே!
பலபல என்றே உதிர்ந்தபூ!
பத்தும் ஒன்றும் பதினொன்று
பலபல என்றே உதிர்ந்த பூ
பத்தும் இரண்டும் பனிரெண்டு
பத்தும் மூன்றும் பதின்மூன்று
பத்தும் நான்கும் பதினான்கு
பத்தும் ஐந்தும் பதினைந்து
பத்தும் ஆறும் பதினாறு
பத்தும் ஏழும் பதினேழு
பத்தும் எட்டும் பதினெட்டு
பத்தும் ஒன்பதும் பத்தொன்பது
பத்தும் பத்தும் இருபதே.
Be the first to comment