
எங்கள் மொழி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – குழந்தைப் பாடல்கள்
எங்கள் மொழி நல்ல மொழி.
இனிமையாகப் பேசும் மொழி.
அன்னை சொல்லித் தந்த மொழி.
அன்பொழுகப் பேசும் மொழி.
பள்ளி சென்று கற்ற மொழி.
பக்குவமாய்ப் பேசும் மொழி.
நண்பர் கூடிப் பழகும் மொழி.
நயமுடனே பேசும் மொழி.
நாள் தோறும் உதவும் மொழி.
நல்ல தமிழ் எங்கள் மொழி.
Be the first to comment