
இன்பமாக உண்ணலாம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி
வாழைக்காய் வேணுமா?
வறுவலுக்கு நல்லது.

கொத்தவரை வேணுமா?
கூட்டுவைக்க நல்லது.

பாகற்காய் வேணுமா?
பச்சடிக்கு நல்லது.

புடலங்காய் வேணுமா?
பொரியலுக்கு நல்லது.

தக்காளி வேணுமா?
சாம்பாருக்கு நல்லது.

இத்தனையும் வாங்கினால்,
இன்றே சமையல் பண்ணலாம்.
இன்றே சமையல் பண்ணலாம்.
இன்ப மாக உண்ணலாம்.
Be the first to comment