மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

மரம் ஏறலாம்

மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி

தென்னைமரத்தில் ஏறலாம்.
தேங்காயைப் பறிக்கலாம்.

மாமரத்தில் ஏறலாம்.
மாங்காயைப் பறிக்கலாம்.

புளியமரத்தில் ஏறலாம்.
புளியங்காயைப் பறிக்கலாம்.

நெல்லிமரத்தில் ஏறலாம்.
நெல்லிக்காயைப் பறிக்கலாம்.

வாழைமரத்தில் ஏறினால்,
வழுக்கிவழுக்கி விழுகலாம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.